கைக்குண்டு மீட்பு: விசாரணைகளை மேற்பார்வை செய்யவுள்ள பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ்

கைக்குண்டு மீட்பு: விசாரணைகளை மேற்பார்வை செய்யவுள்ள பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ்

கைக்குண்டு மீட்பு: விசாரணைகளை மேற்பார்வை செய்யவுள்ள பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ்

எழுத்தாளர் Staff Writer

01 Feb, 2022 | 7:29 pm

 Colombo (News 1st) பொரளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளை மேற்பார்வை செய்ய பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸை சட்டமா அதிபர் நியமித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் இதுவரையில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணை ஆவணங்களுடன், விசாரணைகளை மேற்கொண்ட உயர் அதிகாரிகளை வரவழைத்த சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் , கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய எதிர்கால நடவடிக்கை தொடர்பிலும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவர், கொழும்பு மேலதிக நீதவான் ரஜிந்திரா ஜயசூரியவின் முன்னிலையில் இன்று வாக்குமூலம் வழங்கியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்