காலி கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு

காலி கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு

காலி கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

01 Feb, 2022 | 12:11 pm

Colombo (News 1st) காலி – ரத்கம, வில்லம ரயில் கடவையில் முச்சக்கர வண்டி ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

முச்சக்கர வண்டி ஓட்டுநர், அவருடைய மனைவியின் தாயார் மற்றும் உறவினர் ஒருவர் உயிரிழந்துள்ளாக பொலிஸார் கூறினர்.

விபத்தின் போது படுகாயமடைந்த முச்சக்கர வண்டி ஓட்டுநரின் மனைவி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரயில் கடவையில் சமிஞ்சை விளக்கு ஔிர்ந்து கொண்டிருந்த நிலையில், கடவையை கடக்க முயற்சித்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பெலிஅத்தவிலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த ரயிலு்னேயே குறித்த முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்