நுரைச்சோலையிலிருந்து 160 மெகாவாட் மின்சாரம்

நுரைச்சோலையிலிருந்து 160 மெகாவாட் மின்சாரம் தேசிய கட்டமைப்புடன் இணைப்பு

by Staff Writer 31-01-2022 | 2:56 PM
Colombo (News 1st) செயலிழந்திருந்த நுரைச்சோலை அனல்மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது மின்பிறப்பாக்க இயந்திரத்திலிருந்து 160 மெகாவாட் மின்சாரம் தேசிய கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர் அன்ட்ரூ நவமனி இதனை நியூஸ்பெஸ்ட்டுக்கு உறுதிப்படுத்தினார். கடந்த மாதம் 3 ஆம் திகதி குறித்த மின்பிறப்பாக்க இயந்திரம் செயலிழந்தமையால் இழக்கப்பட்ட 300 மெகாவாட் மின்சாரம், களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தினூடாகவே ஈடு செய்யப்பட்டது.