by Staff Writer 31-01-2022 | 3:42 PM
Colombo (News 1st) இராஜகிரிய ரோயல் பார்க் பிரதேசத்திலுள்ள வாவி கரையோர வீதியிலுள்ள கால்வாய் ஒன்றிலிருந்து இன்று (31) காலை ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் இதுவரை அடையாளங்காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளாரா அல்லது அவர் கால்வாயில் வீழ்ந்துள்ளாரா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.