விண்வௌியில் எடுக்கப்பட்ட நிழற்படங்களை வௌியிட்ட வட கொரியா

விண்வௌியில் எடுக்கப்பட்ட நிழற்படங்களை வௌியிட்ட வட கொரியா

விண்வௌியில் எடுக்கப்பட்ட நிழற்படங்களை வௌியிட்ட வட கொரியா

எழுத்தாளர் Staff Writer

31 Jan, 2022 | 4:51 pm

Colombo (News 1st) ஏவுகணைப் பரிசோதனையின் போது விண்வௌியிலிருந்து எடுக்கப்பட்ட நிழற்படங்களை வட கொரியா வௌியிட்டுள்ளது.

கடந்த 05 ஆண்டுகளில் ஏவப்பட்ட மிகவும் சக்திவாய்ந்த ஏவுகணையிலிருந்து இந்த நிழற்படங்கள் எடுக்கப்பட்டதாக வட கொரியா தெரிவித்துள்ளது.

விண்வௌியிலிருந்து வழமைக்கு மாறாக எடுக்கப்பட்டுள்ள இந்த நிழற்படங்களில் கொரிய தீபகற்பத்தின் பகுதிகள் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள் அடங்கியுள்ளன.

Hwasong-12 எனப்படும் மத்திய தூர கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பரீட்சித்ததாக வட கொரியா இன்று (31) உறுதிப்படுத்தியது.

குறித்த ஏவுகணையின் முழுமையான பலத்தின் மூலம் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அதனால் பயணிக்க முடியுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணைப் பரிசோதனையானது சர்வதேச நாடுகளிடையே அபாய எச்சரிக்கையை பிறப்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்