வட கொரியாவின் மிகப்பெரிய ஏவுகணை பரிசோதனை

2017 ஆம் ஆண்டின் பின்னரான வட கொரியாவின் மிகப்பெரிய ஏவுகணை பரிசோதனை

by Staff Writer 30-01-2022 | 5:03 PM
Colombo (News 1st) 2017 ஆம் ஆண்டின் பின்னர் மிகப்பெரிய ஏவுகணை பரிசோதனை ஒன்றை வட கொரியா மேற்கொண்டுள்ளது. உள்ளூர் நேரப்படி இன்று (30) காலை 07:52 மணிக்கு வட கொரியாவின் கிழக்குக் கடலில் இருந்து குறித்த ஏவுகணை ஏவப்பட்டதாக தென் கொரியா அறிவித்துள்ளது. வட கொரியாவினால் இந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட ஏழாவது ஏவுகணைப் பரிசோதனையாகிய இதனை ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் கண்டித்துள்ளன. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் அணுவாயுதங்களையும் வட கொரியா பரீட்சிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையினால் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.