வாயிற்கதவு வீழ்ந்ததில் 06 வயது சிறுமி பலி

வாயிற்கதவு வீழ்ந்ததில் 06 வயது சிறுமி பலி

by Staff Writer 30-01-2022 | 2:56 PM
Colombo (News 1st) தம்புத்தேகமயில் வாயில் கதவு வீழ்ந்ததில் 06 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சிறுமி தாயுடன் நேற்று (29) காலை தம்புத்தேகமயிலுள்ள ஆசிரியை ஒருவரின் இல்லத்திற்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுமியின் தாய் வாயில் கதவை திறப்பதற்கு முற்பட்ட சந்தர்ப்பத்தில் கதவு சிறுமி மீது வீழ்ந்துள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுமி தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.