தனியாரிடமிருந்து மின்சார கொள்வனவு - அமைச்சு

தனியாரிடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்ய தீர்மானம்

by Staff Writer 30-01-2022 | 2:49 PM
Colombo (News 1st) தனியார் மின்னுற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்கு மின்சக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பிலான யோசனையை நாளை (31) அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். IOC நிறுவனத்திடமிருந்து நேரடியாக எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.