by Staff Writer 30-01-2022 | 4:44 PM
Colombo (News 1st) கொவிட் நோயாளர்கள் பதிவாகும் வீதம் அதிகரித்துள்ள நிலையில், தற்போது அமுலிலுள்ள சுகாதார விதிமுறைகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
புதிய சுகாதார வழிகாட்டல்கள் நாளைய தினம் (31) வௌியிடப்படும் என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் இந்த நாட்களில் செயற்படும் விதம், அடுத்த இரண்டு வாரங்களில் பதிவாகும் தொற்றாளர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்கும் என்பதால் மிகுந்த பொறுப்புடன் செயலாற்றுமாறு விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.