by Staff Writer 30-01-2022 | 4:37 PM
Colombo (News 1st) ஒரு தொகை வௌிநாட்டு பணத்தை சட்டவிரோதமாக துபாய்க்கு கொண்டுசெல்ல முயற்சித்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களின் பயணப்பைகளில் இருந்த 95,000 அமெரிக்க டொலர், 18,000 யூரோ மற்றும் 37,000 ரியால் என்பவற்றை கைப்பற்றியுள்ளதாக சுங்க ஊடகப்பேச்சாளர் பிரதி சுங்க பணிப்பாளர் சுதந்த சில்வா தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட வௌிநாட்டு நாணயங்கள் 25 மில்லியனுக்கும் அதிக பெறுமதியுடையவையென அவர் குறிப்பிட்டார்.