by Staff Writer 29-01-2022 | 4:04 PM
Colombo (News 1st) சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட நிலையில் சுங்கப்பிரிவினரால் கைப்பற்றப்பட்ட 16,000 கிலோகிராம் பீட்ரூட், போலி ஆவணங்களை சமர்ப்பித்து நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்திய நிறுவனமொன்று இறக்குமதியாளராக பெயரிடப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப்பேச்சாளர் சுதந்த சில்வா தெரிவித்தார்.
பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து குறித்த பீட்ரூட் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதனிடையே, குறித்த பீட்ரூட்டினை கொண்டுசெல்ல வருகை தந்தவர் சுங்கப்பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
உருளைக்கிழங்கில் மறைத்து வைத்து சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட 16, 000 கிலோகிராம் பீட்ரூட்டினை சுங்கத்தினர் நேற்று (28) கைப்பற்றினர்.
சுங்க கொள்கலன் பிரிவில், குளிரூட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த இரண்டு கொள்கலன்களை சோதனையிட்ட போது பீட்ரூட் கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்க ஊடகப்பேச்சாளர் சுதந்த சில்வா கூறினார்.