யாழ்ப்பாணத்தில் கடலுக்கு சென்ற மீனவர்கள் இருவரை காணவில்லை

யாழ்ப்பாணத்தில் கடலுக்கு சென்ற மீனவர்கள் இருவரை காணவில்லை

எழுத்தாளர் Staff Writer

29 Jan, 2022 | 8:08 pm

Colombo (News 1st) யாழ். வடமராட்சி கிழக்கு, வத்திராயனிலிருந்து கடலுக்கு சென்று காணாமற்போன இரண்டு மீனவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த மீனவர்கள் நேற்று முன்தினம் (27) கடற்றொழிலுக்கு சென்றுள்ளனர். இவர்களுடன் கடலுக்கு சென்ற ஏனையோர் கரை திரும்பிய நிலையில், இருவரும் காணாமற்போயுள்ளனர்.

காணாமற்போன மீனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து இடம்பெறுகின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்