ஜனாதிபதி தலைமையில் விமானப்படை பயிற்சி நிறைவு நிகழ்வு

ஜனாதிபதி தலைமையில் விமானப்படை பயிற்சி நிறைவு நிகழ்வு

எழுத்தாளர் Staff Writer

29 Jan, 2022 | 7:32 pm

Colombo (News 1st) விமானப்படை வரலாற்றில் அதிகளவானவர்கள் ஒரே தடவையில் பயிற்சிகளை நிறைவு செய்து விடைபெற்றுச்செல்லும் நிகழ்வு இன்று (29) கட்டுநாயக்க விமானப்படை முகாமில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்றது.

6 பாடநெறி பிரிவுகளின் கீழ் 3 தொடக்கம் நான்கரை வருட கால பயிற்சியை நிறைவு செய்த 153 கெடட் அதிகாரிகள் இதன்போது விடைபெற்றுச் சென்றனர்.

இதன்போது, ஒழுக்கத்தை உயரிய மட்டத்தில் பேணி, கடமையை செய்து, நம்பிக்கையை பாதுகாக்க வேண்டும் என ஜனாதிபதி அறிவரை வழங்கினார்.

அனைத்து பாடநெறிகளிலும் விசேட திறமைகளை வௌிப்படுத்திய 14 கெடட் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருது வழங்கி வைத்தார்

விமானப்படையினரால் முன்வைக்கப்பட்ட கண்காட்சிகளை பார்வையிட்ட ஜனாதிபதி, பயிற்சிகளை நிறைவு செய்து விடைபெற்றுச்செல்லும் அதிகாரிகளுடன் குழு நிழற்படம் ஒன்றையும் எடுத்துக்கொண்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்