பல்கலைக்கழகங்களில் தேசிய நல்லிணக்கத்திற்கான மத்திய நிலையங்களை அமைக்க தீர்மானம்

பல்கலைக்கழகங்களில் தேசிய நல்லிணக்கத்திற்கான மத்திய நிலையங்களை அமைக்க தீர்மானம்

பல்கலைக்கழகங்களில் தேசிய நல்லிணக்கத்திற்கான மத்திய நிலையங்களை அமைக்க தீர்மானம்

எழுத்தாளர் Bella Dalima

28 Jan, 2022 | 3:32 pm

Colombo (News 1st) நாட்டில் உள்ள ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் தேசிய நல்லிணக்கத்திற்கான மத்திய நிலையம் ஒன்றை அமைக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதற்கான அனைத்து சட்ட ஏற்பாடுகளும் விடயதானங்களும் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

இளம் சமுதாயத்தினருக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் தேசிய நல்லிணக்க நிலையத்திற்கு பொருத்தமான பணிப்பாளர் ஒருவரை நியமிக்குமாறு உபவேந்தர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, வவுனியா பல்கலைக்கழகம் எதிர்வரும் 11 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

நாட்டின் முதலாவது நல்லிணக்க நிலையமும் அங்கு நிறுவப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்