துருக்கி வௌிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

துருக்கி வௌிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

துருக்கி வௌிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

எழுத்தாளர் Bella Dalima

28 Jan, 2022 | 3:45 pm

Colombo (News 1st) துருக்கி வௌிவிவகார அமைச்சர் Mevlüt Çavuşoğlu உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.

வௌிவிவகார அமைச்சருடன் மேலும் 9 பேர் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமைநேர முகாமையாளர் தெரிவித்தார்.

நாட்டிற்கு வருகை தந்துள்ள துருக்கி நாட்டு வௌிவிவகார அமைச்சர் உள்ளிட்ட தூதுக்குழுவினரை இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய மற்றும் துருக்கிக்கான இலங்கை தூதுவர் உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர்.

ஒரு நாள் விஜயத்தை நிறைவு செய்து, துருக்கி வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட தூதுக்குழு இன்று மாலை நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்