சதொச வழக்கு: ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவர் விடுதலை

சதொச வழக்கு: ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவர் விடுதலை

சதொச வழக்கு: ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவர் விடுதலை

எழுத்தாளர் Bella Dalima

28 Jan, 2022 | 4:12 pm

Colombo (News 1st) சதொச ஊழியர்கள் 153 பேரை வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களை விடுதலை செய்ய கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் ஐந்து வழக்குகளை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்திருந்ததுடன், அமைச்சர் மேல் நீதிமன்றில் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம் அவரை மூன்று வழக்குகளில் இருந்து விடுவித்துள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்களின் முறையான அனுமதியின்றி இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதாக நீதவான் சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்