சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட 16, 000 கிலோகிராம் பீட்ரூட் கைப்பற்றல்

சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட 16, 000 கிலோகிராம் பீட்ரூட் கைப்பற்றல்

சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட 16, 000 கிலோகிராம் பீட்ரூட் கைப்பற்றல்

எழுத்தாளர் Staff Writer

28 Jan, 2022 | 7:18 pm

 Colombo (News 1st) உருளைக்கிழங்குகளுக்குள் மறைத்து வைத்து சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட 16, 000 கிலோகிராம் பீட்ரூட்டினை சுங்கத்தினர் கைப்பற்றியுள்ளனர்.

சுங்க கொள்கலன் பிரிவில் குளிரூட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த இரண்டு கொள்கலன்களை சோதனையிட்ட போது பீட்ரூட் கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்க ஊடகப்பேச்சாளர் சுதந்த சில்வா தெரிவித்தார்.

உருளைக்கிழங்கை இறக்குமதி செய்யும் போர்வையில் இவை பாகிஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளன.

இவ்வாறு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ள பீட்ரூட்டின் பெறுமதி சுமார் 3 மில்லியன் ரூபா என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்