கொழும்பின் பல வீதிகளில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது

கொழும்பின் பல வீதிகளில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது

கொழும்பின் பல வீதிகளில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது

எழுத்தாளர் Bella Dalima

28 Jan, 2022 | 6:17 pm

Colombo (News 1st) 74 ஆவது சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு நாளை (29) முதல் கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இதற்கிணங்க, சுதந்திர தின விழாவிற்கான ஒத்திகை, நாளை முதல் எதிர்வரும் பெப்ரவரி 3 ஆம் திகதி வரை நாளாந்தம் காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இடம்பெறவுள்ளது.

அத்துடன், தேசிய சுதந்திர தின விழா எதிர்வரும் 4 ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ளது.

இதற்கிணங்க, மேற்குறிப்பிடப்பட்ட காலப்பகுதியில் கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளின் பல வீதிகளில் இடைக்கிடையே வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்