English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
28 Jan, 2022 | 8:32 pm
Colombo (News 1st) கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் கலந்துகொள்வதற்கு தமக்கும் சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என தமிழகத்தின் பாரம்பரிய மீனவர்கள் கோரியுள்ளனர்.
பாரதத்தின் தமிழகத்தில் பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் குழுக்கூட்டம் பாம்பன் வடக்கு கடற்கரையில் இன்று நடைபெற்றபோது மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
1. கச்சத்தீவு திருவிழாவில் இந்திய பாரம்பரிய மீனவர்கள் 200 பேருக்கு COVID விதிமுறைகளைக் கடைப்பிடித்து கலந்துகொள்வதற்கு அனுமதி வழங்கவேண்டும்
2. இந்திய படகுகளை ஏலம் விடும் இலங்கை அரசாங்கத்திற்கு கண்டனம் தெரிவிப்பதுடன், நல்ல நிலையிலுள்ள இந்திய மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படவேண்டும்
3. இலங்கை மீனவர்களின் வசமுள்ள தமிழக மீனவர்களின் விசைப்படகு, நாட்டுப் படகுகளுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள இழப்பீட்டுத் தொகையினை மீள் பரிசீலனை செய்தல்
இதேவேளை, இலங்கை – தமிழக மீனவர்களின் ஒற்றுமையை பிரதிபலிக்கும் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய விருவிழா COVID நிலைமை காரணமாக இம்முறை தமிழக மக்களின் பங்குபற்றுதல் இன்றி நடைபெறவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அண்மையில் அறிவித்திருந்தார்.
இதனிடையே, திருவிழாவில் கலந்துகொள்ளும் இலங்கை பக்தர்களும் மூன்று COVID தடுப்பூசிகளையும் பெற்றிருக்க வேண்டியது அவசியம் என கச்சத்தீவு ஆலய பரிபாலகரும் நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
05 May, 2022 | 04:30 PM
20 Feb, 2022 | 10:07 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS