20 அடி பள்ளத்தில் வீழ்ந்த முச்சக்கர வண்டி

20 அடி பள்ளத்தில் வீழ்ந்த முச்சக்கர வண்டி

20 அடி பள்ளத்தில் வீழ்ந்த முச்சக்கர வண்டி

எழுத்தாளர் Staff Writer

27 Jan, 2022 | 12:04 pm

Colombo (News 1st) ஹட்டனில் முச்சக்கர வண்டியொன்று வீதியை விட்டு விலகி சுமார் 20 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஹட்டன் – போடைஸ் ஊடாக டயகம பிரதான வீதியின் டிக்கோயா – பட்டகல பகுதியில் இன்று (27)  காலை 7.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அக்கரப்பத்தனையிலிருந்து ஹட்டன் நகருக்கு சென்ற முச்சக்கர வண்டி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

எவ்வாறாயினும், சாரதி மற்றும் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்களுக்கு காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

முச்சக்கர வண்டி சேதமடைந்துள்ளதுடன், அதிக வேகத்துடன் பயணித்த காரணத்தினால் வேகக் கட்டுப்பாட்​டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்