by Staff Writer 27-01-2022 | 3:03 PM
Colombo (News 1st) அம்பாறை - சாய்ந்தருது, 15 ஆவது பிரிவில் மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மூதாட்டியின் தலையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமைக்கான அடையாளங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (27) அதிகாலையில் இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தனிமையில் வசித்து வந்த 77 வயதான பெண் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார். பெண்ணிடமிருந்த தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக அவரின் மகன் தெரிவித்துள்ளார்.
அப்பெண்ணின் வீட்டிலிருந்து இன்று அதிகாலை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வௌியேறிச் செல்லும் காட்சிகள் அப்பகுதியிலுள்ள CCTV கெமராவில் பதிவாகியுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் சாய்ந்தமருது பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.