அதிக விலைக்கு சீமெந்து விற்பனை செய்தவர் கைது

அதிக விலைக்கு சீமெந்து விற்பனை செய்தவர் கைது

அதிக விலைக்கு சீமெந்து விற்பனை செய்தவர் கைது

எழுத்தாளர் Staff Writer

27 Jan, 2022 | 4:44 pm

Colombo (News 1st) நிர்ணய விலையை விட அதிக விலைக்கு சீமெந்து விற்பனை செய்தவர் ராகம, கடவத்தை வீதி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

65 சீமெந்து மூடைகளுடன் அந்நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவரை கம்பஹா நுகர்வோர் விவகார அதிகார சபையிடம் ஒப்படைத்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

பஹலகரஹமுல்ல பகுதியை சேர்ந்த 46 வயதுடையவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கோனகேன பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்