சட்டவிரோத மணல் அகழ்வு; உழவு இயந்திரங்கள் பறிமுதல்

சட்டவிரோத மணல் அகழ்வு; உழவு இயந்திரங்கள் பறிமுதல்

by Staff Writer 26-01-2022 | 1:08 PM
Colombo (News 1st) கிளிநொச்சி - கல்மடு குளம் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 5 உழவு இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடு குளம் ஆற்றுப் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவதாக இராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது. அதற்கமைய, இராணுவத்தினரின் உதவியுடன் பொலிஸார் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட ஐவரை கைது செய்துள்ளதுடன் மணல் அகழ்விற்கு பயன்படுத்திய 5 உழவு இயந்திரங்களையும் கைப்பற்றியுள்ளனர். மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.