உள்நாட்டு இறைவரி தொழிற்சங்கம் சேவையில் இருந்து விலகல்

by Staff Writer 26-01-2022 | 8:58 PM
Colombo (News 1st) உத்தேச விசேட பொருட்கள் மற்றும் சேவை வரி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (26) முதல் சேவையில் இருந்து விலகுவதாக உள்நாட்டு இறைவரி தொழிற்சங்கம் தெரிவித்தது. தற்போதுள்ள சில வரிகளை நீக்கி விசேட பொருட்கள் மற்றும் சேவை வரியை அறிமுகப்படுத்துவதற்கான சட்டமூலமொன்றை அரசாங்கம் பாராளுமன்றத்தில் முன்வைத்துள்ளது. அதன் மூலம் மதுபானம், புகையிலை, வாகனம், தொலைத்தொடர்பு , பந்தயம் மற்றும் சூதாட்டத்திற்கு விசேட பொருட்கள் மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. சட்டமூலத்திற்கு அமைய, திறைசேரி செயலாளரினால் நியமிக்கப்படும் பிரதி செயலாளரின் கண்காணிப்பின் கீழ் வேறு தரப்பினால் இந்த வரி சேர்ப்பு மற்றும் நிர்வாகம் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 6 நாட்கள் தொழிற்சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், இன்று முதல் அவர்கள் சேவையில் இருந்தும் நீங்கியுள்ளனர்.