சட்டவிரோத மணல் அகழ்வு; உழவு இயந்திரங்கள் பறிமுதல்

சட்டவிரோத மணல் அகழ்வு; உழவு இயந்திரங்கள் பறிமுதல்

சட்டவிரோத மணல் அகழ்வு; உழவு இயந்திரங்கள் பறிமுதல்

எழுத்தாளர் Staff Writer

26 Jan, 2022 | 1:08 pm

Colombo (News 1st) கிளிநொச்சி – கல்மடு குளம் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 5 உழவு இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடு குளம் ஆற்றுப் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவதாக இராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது.

அதற்கமைய, இராணுவத்தினரின் உதவியுடன் பொலிஸார் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட ஐவரை கைது செய்துள்ளதுடன் மணல் அகழ்விற்கு பயன்படுத்திய 5 உழவு இயந்திரங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்