உக்ரனை ஆக்கிரமித்தால் புட்டினுக்கு எதிராக தடை – அமெரிக்க ஜனாதிபதி 

உக்ரனை ஆக்கிரமித்தால் புட்டினுக்கு எதிராக தடை – அமெரிக்க ஜனாதிபதி 

உக்ரனை ஆக்கிரமித்தால் புட்டினுக்கு எதிராக தடை – அமெரிக்க ஜனாதிபதி 

எழுத்தாளர் Staff Writer

26 Jan, 2022 | 10:14 am

Colombo (News 1st) உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமிக்குமாயின், ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மீது தடை விதிப்பதற்கு உத்தேசித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா தமது தென் மேற்கு எல்லையில் உள்ள நாட்டின் மீது நடவடிக்கை எடுக்குமாயின், பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என பைடன் கூறியுள்ளார்.

ரஷ்யா மீது மேற்குலக நாடுகள் தொடர்ந்தும் எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில் அமெரிக்கா தடை குறித்து அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தேவையற்ற பதற்றத்தை தோற்றுவிப்பதாக ரஷ்யா குற்றஞ்சுமத்தியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்