ரயிலுடன் மோதுண்டு மாணவன் பலி

by Staff Writer 25-01-2022 | 7:13 AM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - சங்கத்தானை பகுதியில் ரயிலுடன் மோதுண்டு பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ரயில் பாதையை கடக்க முற்பட்ட போது குறித்த மாணவன் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயிலுடன் மோதியுள்ளார். விபத்தில் கொடிகாமத்தை சேர்ந்த 18 வயதுடைய மாணவரே உயிரிழந்துள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் கூறினார்.