by Staff Writer 25-01-2022 | 2:19 PM
Colombo (News 1st) இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் வீட்டிற்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணையை வேறு பொலிஸாருக்கு மாற்றுமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (24) சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (24) நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இதில் உயிரிழந்த இளைஞன் சார்பில் சட்டத்தரணி கமலநாதன், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரும் ஆஜராகியிருந்தனர்.