ஆபிரிக்க கிண்ண கால்பந்தாட்ட தொடர்; சன நெரிசலில் சிக்கி 8 பேர் பலி

ஆபிரிக்க கிண்ண கால்பந்தாட்ட தொடர்; சன நெரிசலில் சிக்கி 8 பேர் பலி

ஆபிரிக்க கிண்ண கால்பந்தாட்ட தொடர்; சன நெரிசலில் சிக்கி 8 பேர் பலி

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

25 Jan, 2022 | 11:18 am

Colombo (News 1st) கெமரூனில் நடைபெற்ற ஆபிரிக்கக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரை பார்வையிட சென்றிருந்தவர்களில் நெரிசலில் சிக்கி குறைந்தது 08 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தலைநகர் Yaoundeக்கு அருகேயுள்ள Paul Biya விளையாட்டரங்கிற்குள் நுழைவதற்காக ரசிகர்கள் முண்டியடிக்கும் காணொளிகளும் வௌியாகியுள்ளன.

குறித்த சன நெரிசலில் மேலும் பலர் உயிரிழந்திருக்கக்கூடுமென கெமரூனின் மத்திய பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார்.

சன நெரிசலில் சிக்கிய சிறுவர்கள் பலர் சுயநினைவிழந்த நிலையில் காணப்பட்டதாக மற்றுமொரு அறிக்கை வௌியாகியிருந்தது.

இதேவேளை, நெரிசலில் சிக்கிய மேலும் பலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்