கொரோனா தொற்றுக்குள்ளாகும் சிறார்களின் தொகை உயர்வு

கொரோனா தொற்றினால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

by Staff Writer 24-01-2022 | 2:47 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றினால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் ஜீ. விஜேசூரிய தெரிவித்துள்ளார். குறிப்பாக வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் 50 இற்கும் அதிகமான சிறுவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, மேலும் 15 கொரோனா மரணங்கள் நேற்று (23) அறிவிக்கப்பட்டன.