எதிர்காலத்தில் மின்வெட்டு இல்லை - காமினி லொக்குகே

எதிர்காலத்தில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது - மின்சக்தி அமைச்சர்

by Staff Writer 24-01-2022 | 3:47 PM
Colombo (News 1st) எதிர்காலத்தில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். ஜனாதிபதியுடன் இன்று (24) பிற்பகல் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். இதேவேளை, எரிபொருளை ஏற்றிவந்த 02 கப்பல்களுக்கான டொலர்களை செலுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில ஜனாதிபதியுடனான கூட்டத்தின் பின்னர் தெரிவித்தார். அத்துடன் மின்சாரத் துறை, பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு செலுத்த வேண்டியுள்ள 93 பில்லியன் ரூபா கடனுக்கான நிதியை வழங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.