சாரதியின் கவனயீனத்தால் பலியான இளைஞர் 

சாரதியின் கவனயீனத்தால் பலியான இளைஞர் 

எழுத்தாளர் Staff Writer

24 Jan, 2022 | 2:41 pm

Colombo (News 1st) புத்தளம் – குருணாகல் வீதியின் கல்லடி 6 ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 27 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஆணமடுவ நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளொன்று எதிர் திசையில் வந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர், புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

லொறி சாரதியின் கவனயீனமே இந்த விபத்திற்கான காரணமெனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

விபத்துடன் தொடர்புடைய லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்