இந்திய மீனவர்கள் 43 பேரின் வழக்கு தொடர்பில் முன் நகர்த்தல் பத்திரம் தாக்கல்

இந்திய மீனவர்கள் 43 பேரின் வழக்கு தொடர்பில் முன் நகர்த்தல் பத்திரம் தாக்கல்

இந்திய மீனவர்கள் 43 பேரின் வழக்கு தொடர்பில் முன் நகர்த்தல் பத்திரம் தாக்கல்

எழுத்தாளர் Staff Writer

24 Jan, 2022 | 6:11 pm

Colombo (News 1st) விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 43 பேரின் வழக்கு தொடர்பில் இன்று (24) முன் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளால் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் முன் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 43 தமிழக மீனவர்களும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து வாக்குமூலத்தை பெறும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாகவும் மீனவர்களை இலங்கை எல்லைக்குள் கைது செய்தமையை உறுதிப்படுத்தும் நில அளவை திணைக்களத்தின் சான்றுப்பத்திரம் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் முன் நகர்த்தல் பத்திரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனை கவனத்திற்கொண்ட ஊர்காவற்றுறை நீதவான் கஜநிதிபாலன், சந்தேகநபர்களான மீனவர்களை நாளைய தினம் (25) மன்றில் ஆஜர்படுத்துமாறும் அவர்களுக்கு எதிரான குற்றப்பத்திரத்தை மன்றில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டார்.

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி இராமேஸ்வரம் – தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த 43 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்