வெலிகம கடலில் மூழ்கி 2 சிறுமிகள் காணாமல் போயினர்

வெலிகம கடலில் மூழ்கி 2 சிறுமிகள் காணாமல் போயினர்

by Staff Writer 23-01-2022 | 4:33 PM
Colombo (News 1st) வெலிகம கடலில் நீராடச் சென்ற இரு சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 12 மற்றும் 15 வயதான இரண்டு சிறுமிகளே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், நிஹால் தல்தூவ குறிப்பிட்டுள்ளார். காணாமல் போயுள்ள சிறுமிகளைத் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.