போதைப்பொருட்களுடன் சிவனொளிபாதமலை சென்ற இளைஞர்கள்

போதைப்பொருட்களுடன் சிவனொளிபாதமலை சென்ற 27 இளைஞர்கள் கைது

by Staff Writer 23-01-2022 | 4:52 PM
Colombo (News 1st) போதைப்பொருட்களுடன் சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற 27 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் காணப்பட்ட கஞ்சா மற்றும் போதை வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். நல்லதண்ணி மற்றும் ஹட்டன் பொலிஸார் இணைந்து சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர். 18 தொடக்கம் 30 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் 25 பேரை ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது, அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.