English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
23 Jan, 2022 | 3:17 pm
Colombo (News 1st) ‘பண்டோரா பேப்பர்ஸ்’ தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் வாக்குமூலம் பெறுவதற்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
ரஞ்சன் ராமநாயக்கவின் கோரிக்கைக்கு அமையவே இந்த வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
சட்டத்தரணியூடாக சத்தியக்கடதாசி மூலம் வாக்குமூலம் வழங்குமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
‘பண்டோரா பேப்பர்ஸ்’ தொடர்பிலான விசாரணைகளுக்காக நிருபமா ராஜபக்ஸ மற்றும் திருக்குமார் நடேசன் ஆகியோரிடம் மாத்திரமே வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
இந்த விசாரணைகளுக்காக உள்நாட்டு வணிக வங்கிகள், அரச வங்கிகள் மற்றும் வரி வருமான திணைக்களத்திடம் ஆவணங்கள் கோரப்பட்டுள்ளன.
சர்வதேச அரசியல் தலைவர்கள் மற்றும் கோடீஸ்வரர்களின் இரகசிய கொடுக்கல், வாங்கல் அடங்கிய பட்டியலில் இலங்கையின் முன்னாள் அமைச்சரான நிருபமா ராஜபக்ஸ மற்றும் அவரது கணவரான வர்த்தகர் திருக்குமார் நடேசன் ஆகியோரது பெயர்களும் வௌியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
25 Mar, 2022 | 05:13 PM
17 Feb, 2022 | 08:34 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS