நீரில் மூழ்கி சிறுமி பலி

நீரில் மூழ்கி சிறுமி பலி

எழுத்தாளர் Staff Writer

23 Jan, 2022 | 3:02 pm

Colombo (News 1st) திருகோணமலை – இறக்கக்கண்டி பாலத்துக்கு அருகில் நீரில் மூழ்கி சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (22) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை – பாசல்மாவத்த – ஆண்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவி மற்றுமொரு மாணவி மற்றும் ஆசிரியருடன் இறக்கக்கண்டி பகுதிக்கு சென்ற போது பாலத்துக்கு அருகில் உள்ள கடலில் நீராடியுள்ளார்.

இதன்போதே சிறுமி அலையில் அள்ளுண்டு செல்லப்பட்டதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார்.

உயிரிழந்த சிறுமியின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுமியுடன் நீரில் மூழ்கிய மற்றுமொரு சிறுமி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் குச்சவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்