ஶ்ரீலங்கா வனிதாபிமான 2021: வட மத்திய மாகாணத்திற்கான போட்டிகள் பொலன்னறுவையில் நடைபெற்றன

ஶ்ரீலங்கா வனிதாபிமான 2021: வட மத்திய மாகாணத்திற்கான போட்டிகள் பொலன்னறுவையில் நடைபெற்றன

எழுத்தாளர் Bella Dalima

22 Jan, 2022 | 10:12 pm

Colombo (News 1st) நியூஸ்ஃபெஸ்ட் – NDB வங்கியுடன் இணைந்து நடத்தும் ஶ்ரீலங்கா வனிதாபிமான 2021-க்கான போட்டிகளில் வட மத்திய மாகாணத்திற்கான போட்டிகள் இன்று (22) பொலன்னறுவை City Center-இல் நடைபெற்றன.

நாட்டைக் கட்டியெழுப்பும் மகளிரை வலுப்படுத்தும் நோக்கத்துடன் நடத்தப்படுகின்ற வனிதாபிமான நிகழ்ச்சி நாட்டிலுள்ள துணிச்சலான, திறமையான பெண்களை பாராட்டும் போட்டி நிகழ்ச்சியாகும்.

தொழில் முயற்சியாண்மை, இளம் தலைவர்கள், தன்னார்வ சேவை, கல்வி, விளையாட்டு, சுற்றுச்சூழல் முகாமைத்துவம் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் போட்டிகள் இடம்பெற்று, வட மத்திய மாகாண வெற்றியாளர்கள் விருதிற்கு தெரிவு செய்யப்பட்டனர்.

பெண்களுக்கான செயலமர்வுகள், கருத்தரங்குகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நாள் முழுவதும் இடம்பெற்றன.

ஶ்ரீலங்கா வனிதாபிமான 2021 கிழக்கு மாகாணத்திற்கான போட்டிகள் எதிர்வரும் சனிக்கிழமை மட்டக்களப்பில் நடைபெறவுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்