விபத்தில் சிக்கிய அர்னால்ட் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்

விபத்தில் சிக்கிய அர்னால்ட் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்

விபத்தில் சிக்கிய அர்னால்ட் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்

எழுத்தாளர் Bella Dalima

22 Jan, 2022 | 10:36 pm

பிரபல ஹொலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேகர் (Arnold Schwarzenegger)கார் விபத்தில் சிக்கி உயிர் பிழைத்துள்ளார்.

திரைப்படங்களின் மூலம் புகழ்பெற்ற இவர் தற்போது படங்களில் நடிப்பதை விடுத்து அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

அர்னால்ட் சென்ற கார் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள சாலையில் சென்றுகொண்டிருந்த போது விபத்து இடம்பெற்றுள்ளது.

அர்னால்டின் காருக்கு முன்னதாக சென்ற இரு கார்கள் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதனால் பின்னால் வந்த வாகனங்களும் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக மோதின. மொத்தம் நான்கு கார்கள் இந்த விபத்தில் சிக்கின.

அர்னால்டின் SUV மாடல் கார் ஒரு சிறிய காரின் மீது மேலே ஏறி நின்றது. சீட் பெல்ட் அணிந்திருந்ததால் அதிர்ஷ்டவசமாக அர்னால்டிற்கு பெரிய காயங்கள் ஏற்படவில்லை.

இந்த விபத்தில் பெண் ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்