நாட்டின் 4 நகரங்களில் வளி மாசடைதல் அதிகரிப்பு

நாட்டின் 4 நகரங்களில் வளி மாசடைதல் அதிகரிப்பு

நாட்டின் 4 நகரங்களில் வளி மாசடைதல் அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

22 Jan, 2022 | 4:18 pm

Colombo (News 1st) நாட்டின் நான்கு நகரங்களில் வளி மாசடைதல் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது.

கொழும்பு, யாழ்ப்பாணம், புத்தளம் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலேயே வளி மாசடைதல் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சுற்றாடல் பிரிவின் பணிப்பாளர் சரத் பிரேமசிறி குறிப்பிட்டார்.

பலத்த காற்று வீசுவதால், வளி மாசடைவு அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.

இதனிடையே, மின்னுற்பத்தியில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில், மின்பிறப்பாக்கிகள் அதிகமாக பயன்படுத்தப்படுவதாலும் வளி மாசடைதல் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சுற்றாடல் பிரிவின் பணிப்பாளர் சரத் பிரேமசிறி சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்