கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 6 இலட்சத்தை கடந்தது

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 6 இலட்சத்தை கடந்தது

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 6 இலட்சத்தை கடந்தது

எழுத்தாளர் Staff Writer

22 Jan, 2022 | 3:16 pm

Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்தை கடந்துள்ளது.

வௌிநாடுகளில் இருந்து வருகை தந்த 6 பேர் உள்ளிட்ட 840 பேருக்கு நேற்று (21) கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 6,00,203 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 17 கொரோனா மரணங்கள் நேற்று அறிவிக்கப்பட்டன. உயிரிழந்தவர்களில் 13 ஆண்களும் 4 பெண்களும் அடங்குகின்றனர்.
அத்துடன் இவர்களில் 10 பேர் 60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களாவர்.

இந்த மரணங்கள் அனைத்தும் ஜனவரி 20 ஆம் திகதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,272 ஆக அதிகரித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்