கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் தீ பரவல்

கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் தீ பரவல்: பல மில்லியன்​ ரூபா பெறுமதியான பொருட்கள் சேதம்

by Staff Writer 21-01-2022 | 6:32 AM
Colombo (News 1st) கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் காசநோய் பிரிவில் நேற்றிரவு 11.45 மணியளவில் தீ பரவியதாக பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சி தீயணைப்பு பிரிவினர், பொலிஸார் இணைந்து சுமார் ஒரு மணித்தியால பிரயத்தனத்தின் பின்னர் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். தீயினால் பல மில்லியன்​ ரூபா பெறுமதியான பொருட்களுக்கு சேதமேற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எவ்வாறாயினும், உயிர் சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை. தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.