இன்று மின்வெட்டு இல்லை

களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்திற்கு டீசல் கிடைத்தது; இன்று மின்வெட்டு இல்லை

by Staff Writer 21-01-2022 | 3:42 PM
Colombo (News 1st) பெட்ரோலிய கூட்டுத்தாபனம் உறுதியளித்தவாறு 10,000 மெட்ரிக் தொன் டீசல் இன்று காலை களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. டீசல் கிடைத்துள்ளதால் எவ்வித சிக்கலுமின்றி களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தின் மின்னுற்பத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என இலங்கை மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர், மேலதிக பொது முகாமையாளர் அன்ட்ரூ நவமணி தெரிவித்துள்ளார். இதனிடையே, சப்புகஸ்கந்த மற்றும் கொழும்பு துறைமுகத்தின் மிதக்கும் மின்னுற்பத்தி நிலையத்திற்கு தேவையான 500 மெட்ரிக் தொன் எண்ணெய்யை பெற்றுக்கொடுக்கவும் பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்தது. இதனால் மின்வெட்டு இன்றி இன்றும் தொடர்ந்து மின்சாரத்தை விநியோகிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், சப்புகஸ்கந்த மின்னுற்பத்தி நிலையத்தில் தொடர்ந்தும் நெருக்குடி நிலவுவதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர், மேலதிக பொது முகாமையாளர் அன்ட்ரூ நவமணி தெரிவித்துள்ளார். சப்புகஸ்கந்த A நிலையத்தில் 8 மணித்தியாலத்திற்கு தேவையான எண்ணெயும், B நிலையத்தில் 20 மணித்தியாலத்திற்கு தேவையான எண்ணெயும் மாத்திரமே போதுமானதாக உள்ளது. இந்த மின் நிலையங்களூடாக 108 மெகா வாட் மின்சாரம் தேசிய கட்டமைப்புடன் இணைக்கப்படுகின்றது. இதேவேளை, தங்களின் கோரிக்கைக்கு உரிய தீர்வு வழங்கப்படும் வரை சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை தொடரவுள்ளதாக இலங்கை மின்சார பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.