40 மில்லியன் ரூபா பெறுமதியான வௌிநாட்டு பணத்தை கடத்த முயன்ற ஐவர் கைது

40 மில்லியன் ரூபா பெறுமதியான வௌிநாட்டு பணத்தை கடத்த முயன்ற ஐவர் கைது

40 மில்லியன் ரூபா பெறுமதியான வௌிநாட்டு பணத்தை கடத்த முயன்ற ஐவர் கைது

எழுத்தாளர் Bella Dalima

20 Jan, 2022 | 3:42 pm

Colombo (News 1st) வௌிநாட்டு பண கடத்தலில் ஈடுபட்ட 05 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மிக சூட்சுமமான முறையில் பணத்தை பயணப் பொதிகளில் மறைத்து வைத்து, சந்தேகநபர்கள் துபாய் நோக்கி பயணிக்க முயற்சித்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து 22,300 அமெரிக்க டொலர், 63,500 ஸ்டேர்லிங் பவுன், 292,000 சவுதி ரியால் மற்றும் 75,000 திர்ஹம் ஆகியன கைப்பற்றப்பட்டதாக சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைப்பற்றப்பட்ட வௌிநாட்டு பணம் 40 மில்லியன் ரூபா பெறுமதியானது என மதிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பெண்களும் இரண்டு ஆண்களும் அடங்குகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்