4 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது

4 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது

4 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது

எழுத்தாளர் Staff Writer

20 Jan, 2022 | 2:08 pm

Colombo (News 1st) தலைமன்னார் – ஊருமலை பகுதியில் 04 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊருமலை பகுதியை சேர்ந்த 18 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்றை நேற்று (19) மாலை சோதனைக்குட்படுத்திய போது போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

படகிலிருந்து 485 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேகநபர்களை தேடி சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், போதைப்பொருளுடன் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்