மேலும் 12 கொரோனா மரணங்கள் பதிவு

மேலும் 12 கொரோனா மரணங்கள் பதிவு; இதுவரை 15,255 பேர் உயிரிழப்பு

by Bella Dalima 20-01-2022 | 6:28 PM
Colombo (News 1st) மேலும் 12 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்த மரணங்கள் நேற்று முன்தினம் (18) பதிவானவையென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 08 ஆண்களும் 04 பெண்களும் அடங்குகின்றனர். அத்துடன், இவர்களில் 09 பேர் 60 வயதிற்கும் மேற்பட்டவர்களாவர். இலங்கையில் இதுவரை 15,255 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.