நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம்

நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம்

by Staff Writer 20-01-2022 | 9:09 AM
Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் இன்று (20) மற்றும் நாளைய (21) தினங்களில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சு மற்றும் தேசிய டெங்கு ஒழிப்பு பணியகம் ஆகியன இணைந்து இந்த திட்டத்தை முன்னெடுக்கவுள்ளன. ''சுத்தமான சூழல் - ஆரோக்கியமான நாளைய தினம்'' என்ற தொனிப்பொருளின் கீழ் நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த வருடத்தின் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 5,200 இற்கும் அதிக டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பணியகத்தின் சமூக வைத்திய நிபுணர் இந்திக வீரசிங்க குறிப்பிட்டார்.