தீக்கிரையான வவுனியா உணவகம்

by Staff Writer 20-01-2022 | 6:50 AM
Colombo (News 1st) வவுனியா - வைரவபுளியங்குளம் பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் தீ பரவியுள்ளது. இன்று (20) அதிகாலை உணவகத்தில் தீ பரவியதாக பொலிஸார் கூறினர். மதுபான விற்பனையுடன் கூடிய உணவகம் ஒன்றிலேயே இவ்வாறு தீ பரவியுள்ளது. நகர சபையின் தீயணைப்பு பிரிவினரால், தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள போதிலும் உணவகம் முழுமையாக தீக்கிரையாகியுள்ளது. உணவகத்தில் தீ பரவியமைக்கான காரணம் தெரியவில்லை என பொலிஸார் கூறினர். வவுனியா தலைமையக பொலிஸார் சம்பவம் இடத்திற்கு சென்றுள்ளனர்.