மீண்டும் களமிறங்கும் மீரா ஜாஸ்மின்

மீண்டும் களமிறங்கும் மீரா ஜாஸ்மின்

மீண்டும் களமிறங்கும் மீரா ஜாஸ்மின்

எழுத்தாளர் Bella Dalima

20 Jan, 2022 | 3:53 pm

தமிழ், மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை மீரா ஜாஸ்மின் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் படங்களில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘காதல் பிசாசே காதல் பிசாசே’ என்று இளைஞர்களை முணுமுணுக்க வைத்த பாடலின் மூலம் அறியப்பட்டவர் நடிகை மீரா ஜாஸ்மின். இவர் அறிமுகமான ரன் படத்தை தொடர்ந்து புதிய கீதை, ஜி, சண்டக்கோழி, ஆயுத எழுத்து போன்ற பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

இவர் தமிழில் கடைசியாக 2014-இல் வெளிவந்த விஞ்ஞானி என்ற படத்தில் நடித்தார். மலையாளத்தில் சில படங்கள் நடித்து வந்தாலும் தமிழில் இதுவே அவர் கடைசியாக நடித்த திரைப்படம். இந்நிலையில், அவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் களம் இறங்கபோவதாக அறிவித்துள்ளார்.

மீரா ஜாஸ்மின் தற்போது பல தமிழ் படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளதாகவும் விரைவில் அந்த படங்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல் வெளியாகவுள்ளது.

மேலும் இயக்குனர் சத்யன் அந்திக்காட் இயக்கிய ‘மகள்’ படத்திலும் நடித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்