நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலைய திருத்த பணிகளுக்காக சீன நிபுணர்கள் நாட்டிற்கு வருகை

நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலைய திருத்த பணிகளுக்காக சீன நிபுணர்கள் நாட்டிற்கு வருகை

நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலைய திருத்த பணிகளுக்காக சீன நிபுணர்கள் நாட்டிற்கு வருகை

எழுத்தாளர் Staff Writer

20 Jan, 2022 | 7:23 am

Colombo (News 1st) நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தில் செயலிழந்துள்ள மின்பிறப்பாக்கியை திருத்துவதற்காக சீன நிபுணர்கள் இருவர் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

மின்பிறப்பாக்கியை திருத்துவதற்கான ஆலோசனைகளை அவர்கள் தற்போது வழங்குவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

குறித்த மின்பிறப்பாக்கி செயலிழந்தமையால் தேசிய கட்டமைப்பிற்கான 300 மெகாவாட் மின்சாரம் கிடைக்கவில்லை.

இதனால் மிக துரிதமாக மின்பிறப்பாக்கியை திருத்தும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்